எழுத்தாளனும் இன்றைய நிலையும்
எவன் ஒருவன் - தன்
உணர்வுகளை ஒன்றாக்கி,
உதிரத்தை மையாக்கி
உள்ளதை உள்ளபடி
எழுதுகின்றானோ.....,
எவன் ஒருவன் - தன்
எழுத்துக்களால் - கத்தி
முனையை விட கூர்மையாக,
ஆழமாக அடுத்தவன்(ஈனர்)
மனதைக் குத்திக்
கிழிக்கின்றானோ.....,
எவன் ஒருவன் - தன்
இறந்த கால, நிகழ்கால
நிகழ்வுகளுக்கூடாக
தேசத்தை ஆராய்ந்து
நல்லதொரு
எதிர்கால நிலை காண
துடிக்கின்றானோ.....,
எவன் ஒருவன் - தன்
சுற்றார் சூழார்
வலிகளையும்
வடுக்களையும்
வார்த்தைகள் கொண்டு
வடிக்கின்றானோ.....,
எவன் ஒருவன் - தன்
நொருங்கிய
மன வடிவங்களின்
சிதறல்களை
ஆதங்கங்களாக்கி
வரிவடிவம்
கொடுக்கின்றானோ.....,
எவன் ஒருவன் - தன்
நிலை மாறாமல் மறவாமல்
எத்துயர் வந்தப் போதும்
எழுந்து நிற்கும்
துணிவு கொண்டு
தன்னை பதிக்கின்றானோ.....,
அவனே தேசத்துரோகியென
முத்திரை குத்தப்படும்
முதல் மனதன்!
Comments