84. நீ தான்

என் மனசுக்குள்ளயும் நீ தான்
நான் மனனம் செய்ததும் நீ தான்
என் நினைவுக்குள்ள வந்து
நித்தம் நூறு கதை பேசி போறீயே நீ


ஏற்றிக் கொண்டேன் 
உன் நினைவை 
நெஞ்சில், 
எழுதி வைத்தேன் 
பல கவிதைகள் 
என்னில்! 

பேசிக் கொண்டேன் 
தனிமையில் நானே 
என்னுள், 
பேதழித்தேன் 
உனை நேரில் 
கண்டால்! 

என் கண்ணுக்குள்ளயும் நீ தான் 
நான் கருத்தில் கொண்டதும் நீ தான் 
ஒரு புயலப்போல வந்து 
பூவைப்போல என்னை 
உரசி போறியே நீ 

ஊற்றிக் கொண்டேன் 
உன்னை உயிராய் 
உடலில், 
உணர்ந்து கொண்டேன் 
உண்மை அன்பை 
உன்னில்! 

பார்த்துக் கொண்டேன் 
என்னை நானே 
பலமுறை, 
மயங்கி நின்றேன் 
உன் மதிமுகம் 
கண்டு! 

என் கனவில் வந்ததும் நீ தான் 
நான் கலையாய்ப் பார்த்ததும் நீ தான் 
ஒரு ஒளியைப் போல வந்து 
உள்ளமெங்கும் புகுந்து 
ஊறிப் போறியே நீ 

போற்றிக் கொண்டேன் 
உன் அழகை 
அணுவாய், 
பதித்து வைத்தேன் 
உன் பெயரை
அகத்தில்! 

கேட்டுக் கொண்டேன் 
உன் குயிலோசைக் குரலை 
தொடர்ந்து வந்தேன் 
உன் நிழலாய் உன்னை! 

மின்னலாக வந்து 
தாக்கிவிட்டுச் சென்ற 
தேவலோகச் சிலையோ? - நீ 
கோடி தேவதைகள் 
சேர்த்து சேர்த்து வைத்த 
அழகுகளின் அழகோ?






Comments

தொடர்ந்து காதல் கவிதைகள்?????
காதல் வந்துருச்சு....
//ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...
காதல் வந்துருச்சு..//

அப்ப சரி வாழ்த்துக்கள்..
ஆஹா கவிதையில் காதல் மழை கொட்டுகிறது.:) அழகாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!
விஜய் said…
"ஊற்றிக் கொண்டேன்
உன்னை உயிராய் "

ரொம்ப நல்லா இருக்கு.
யோகா அண்ணா அது வந்து ரொம்ப நாட்கள் ஆயிட்டு.... இப்போ வாழ்த்து சொல்றீங்க? :(
நன்றி யாழினி :(

உங்கள் கருத்துக்களை தொடர்ந்து தெரிவியுங்கள்
கவிதை(கள்) said...

"ஊற்றிக் கொண்டேன்
உன்னை உயிராய் "

ஊற்றிக் கொண்டேன் உன் கருத்துக்களையும் எனக்குள் தொடர்ந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்

நன்றி

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

91.தமிழர் ஆடற்கலை வடிவங்கள்

29. தவிப்போடு ஒரு மனசு