85. தேடல் முடிவு
நினைவுகளில் நீரூற்றி
அனுபவத்தை வேராக்கி
மெய் விதை நாட்டி
உணர்வு செடி தன்னை
எழுது எழுது என
மனசு உசுப்பேத்த....
உடல் சோர்வோடு
சோகமும் என்னில்
அப்படியே மெத்தை
என்னை அணைத்துக் கொள்ள
தூங்காமல் தூங்கிப் போனேன்
விடியற்காலை விழித்தெழுந்து
பேனையின் கதவை திறந்து
நிற“மை” உடையாளனை
கொண்டு முடித்து விடுவேன்
என தொடங்கும் போதே
செத்துப் போயிருந்தது
என் கவிதை உறுப்புக்கள்
மூளையை முடிந்தவரை
குடைந்து அலசி ஆராய்ந்தேன்
திகைத்தேன் விழித்தேன்
காணாமல் போயிருந்தது
என் கவிதை
விடிந்ததும் எழுதிடுவேன்
என தூக்கத்தோடு
நினைத்தனை தவிர
எதுவுமே நினைவில் இல்லை
தூக்கத்தோடு தூக்கமாய்
தூரமாய் போயிருந்தது
என் கவிதை
என்ன இது?
முதலாவது கவிதையே
உணர்வுகள் செத்து
கரு மறுத்துப் போனதில்
நடைப்பிணமாக திரிகிறதே...?
கவிதை கால்கள்
அடியும் நகராமல்
அசைவற்று அப்படியே
மீண்டும் மீண்டும்
அதே வரிகளை
விட்டு விட்டுச்
சொல்லிக் கொண்டிருந்தது
சிந்தனைக்குள்
தேடித் தேடிக் களைத்துப் போய்
வராமல் போகவே
தேடிப் பிடிப்பதென்று
மெய் தேடல் காண ஓடியது
எங்கெங்கோ தேடிவிட்டு
தளர்ந்து போன மனதினொடு
தனிமையில் அமர்ந்து கொண்டே
கண்களை மெதுவாக மூடினேன்
என் மனசாட்சி விழித்துக் கொண்டது
அது பேசவும் செய்தது என்னோடு
முட்டாளே.....
எங்கெங்கோ தேடிவிட்டாய்
எங்கெங்கோ ஓடிவிட்டாய்
உன்னில் கருவுற்ற கவியை
உனக்குள் தேட மறந்ததேன்?
விழித்துக் கொண்டேன்
எனக்குள் நானே
பிரசவித்தேன் - என்
கவிதை கருவை
என்னை என்னில்
நானே தேடவும் செய்தேன்
நானும் நானே ஆனேன்!
அனுபவத்தை வேராக்கி
மெய் விதை நாட்டி
உணர்வு செடி தன்னை
எழுது எழுது என
மனசு உசுப்பேத்த....
உடல் சோர்வோடு
சோகமும் என்னில்
அப்படியே மெத்தை
என்னை அணைத்துக் கொள்ள
தூங்காமல் தூங்கிப் போனேன்
விடியற்காலை விழித்தெழுந்து
பேனையின் கதவை திறந்து
நிற“மை” உடையாளனை
கொண்டு முடித்து விடுவேன்
என தொடங்கும் போதே
செத்துப் போயிருந்தது
என் கவிதை உறுப்புக்கள்
மூளையை முடிந்தவரை
குடைந்து அலசி ஆராய்ந்தேன்
திகைத்தேன் விழித்தேன்
காணாமல் போயிருந்தது
என் கவிதை
விடிந்ததும் எழுதிடுவேன்
என தூக்கத்தோடு
நினைத்தனை தவிர
எதுவுமே நினைவில் இல்லை
தூக்கத்தோடு தூக்கமாய்
தூரமாய் போயிருந்தது
என் கவிதை
என்ன இது?
முதலாவது கவிதையே
உணர்வுகள் செத்து
கரு மறுத்துப் போனதில்
நடைப்பிணமாக திரிகிறதே...?
கவிதை கால்கள்
அடியும் நகராமல்
அசைவற்று அப்படியே
மீண்டும் மீண்டும்
அதே வரிகளை
விட்டு விட்டுச்
சொல்லிக் கொண்டிருந்தது
சிந்தனைக்குள்
தேடித் தேடிக் களைத்துப் போய்
வராமல் போகவே
தேடிப் பிடிப்பதென்று
மெய் தேடல் காண ஓடியது
எங்கெங்கோ தேடிவிட்டு
தளர்ந்து போன மனதினொடு
தனிமையில் அமர்ந்து கொண்டே
கண்களை மெதுவாக மூடினேன்
என் மனசாட்சி விழித்துக் கொண்டது
அது பேசவும் செய்தது என்னோடு
முட்டாளே.....
எங்கெங்கோ தேடிவிட்டாய்
எங்கெங்கோ ஓடிவிட்டாய்
உன்னில் கருவுற்ற கவியை
உனக்குள் தேட மறந்ததேன்?
விழித்துக் கொண்டேன்
எனக்குள் நானே
பிரசவித்தேன் - என்
கவிதை கருவை
என்னை என்னில்
நானே தேடவும் செய்தேன்
நானும் நானே ஆனேன்!
Comments
நல்ல கவிதை... இன்னும் எழுதுங்கள்...
வாழ்த்துக்கள்.