91.தமிழர் ஆடற்கலை வடிவங்கள்

பரத நாட்டியம்
இன்று பரத நாட்டியம் என அழைக்கப்பட்டாலும் ஆரம்பக்காலங்களில் சதிராட்டம் என்றே அழைக்கப்பட்டது. சதிராட்டத்துக்கு திரு.கிருஸ்ணையர் அவர்கள் தான் 1930 இல் பரதநாட்டியம் என்று பெயர் கொடுத்தார்.

இது தென்னிந்தியாவிற்குரிய நடனமாக கருதப்பட்டாலும் இன்று இலங்கையில் பரதநாட்டியம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினராலும் , மேட்டுக்குடியினராலும் மட்டுமல்லாமல் பலராலும் கற்றுக்கொள்ளப்படுவதோடு, பணச்செலவில் அரங்கேற்றமும் செய்யப்பட்டு வருகின்றது. இன்று சிங்களவர்கள் மத்தியிலும், வெளி நாட்டவர்கள் மத்தியிலும் கூட சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. பரதநாட்டியத்தின்உயிரும், வேர்களும் தமிழரின் கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் ஆழப்பதிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பரத நாட்டியம் என்றதுமே நம் நினைவிற்கு வருபவர் சிவபெருமானே. சிவனைடராஜர் வடிவில் வணங்கப்பட்டே நடனம் ஆரம்பிக்கப்படுகின்றது. பரதத்த முழுமுதற் கடவுளாக சிவனே போற்றப்படுகின்றார் என்பதிலிருந்தே இது மிகத் தொன்மை வாய்ந்ததென்பது புலனாகின்றது. மேலும் பரத முனிவரால் உண்டாக்கப்பட்டதனாலேயே பரதம் எனும் பெயர் பெற்றதாகக் கூறப்படுகின்றது. பரதம் என்பது ப - பாவம் (உணர்ச்சியையும்), ர - இராகம் (இசையையும்), த- தாளம் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகின்றது. நன்கு தேர்ச்சி பெற்றதொரு நாட்டியக்கலைஞரின் முக பாவனையில்நவரசங்களின் பாவனைகளையும் வெளிக்கொணருதலைக் காணலாம்.

ஆனால் சிலப்பதிகாரத்திலேயே தமிழரின் நாட்டியக்கலையைப் பற்றி விளக்கமாக உள்ளது. மாதவியின் அரங்கேற்றத்தை விவரிக்கும்இளங்கோவடிகள், ஆட்ட வகைகள், உடையலங்காரம், ஒவ்வொருவகையான ஆட்டத்திற்கும், தேவையான் மேடையின் அளவுஅலங்காரத்தைக் கூட விவரிக்கிறார். தமிழரின் பண்டைக்கால நாட்டியநன்னூல் தமிழெதிரிகளால் அழிக்கப் பட்டு விட்டது என்றும் தமிழரின் நாட்டியக் கலையான சதிர் அல்லது பரதநாட்டியத்துக்கும் பரதமுனிவருக்கும், சமஸ்கிருதத்துக்கும் எள்ளளவு தொடர்பும் இல்லை என்றும் இரு கருத்து முன்வைக்கப்படுகின்றது.

சிவபெருமான் ஆடும் நடனம் 'தாண்டவம்' என்று சொல்லப்படுகிறது. மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர் ஆடும் நடனம் 'ஆனந்த தாண்டவம்' என்றும், அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் 'ருத்ர தாண்டவம்' என்றும்அழைக்கப்படுகிறது. மென்மையான அசைவுகள் மற்றும் பதங்களுடன்நடனம் 'லாஸ்யா' என்றும் அழைக்கப்படுகிறது.

உடல்சைவுகளும், கை முத்திரைகளையும் அடவு என்றும், பல அடவுகள்சேர்ந்தது ஜதி என்றும் கூறப்படுகின்றது. அடவுகள் சுமார் 120 உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட என்பது வரைதான் தற்போது பயன்பாட்டில் உள்ளது.

பரத நாட்டியத்திற்கு பாடல், நட்டுவாங்கம் இசைக்கருவிகளின் துணைதேவை. இசைக்கலைஞர்கள் மேடையின் ஒரு புறமாக அமர்ந்து இசைக்க, நடனம் ஆடுபவர் மேடையின் மையப்பகுதியில் ஆடுவார். நடனம் ஆடுபவர், நாட்டியத்திற்காக பிரத்யோகமாக தைக்கப்பட்ட வண்ணப் பட்டாடைகள்அணிந்து இருப்பார். மேலும் பரத நாட்டியத்திற்கான நகைகளையும், காலில்சலங்கையும் அணிந்திருப்பர்..

பரத நாட்டியம் பயிற்றுவிப்பதில் பல்வேறு பாணிகளும் உள்ளன. அவற்றில்சில, 'பந்தநல்லூர் பாணி', 'வழுவூர் பாணி', 'தஞ்சாவூர் பாணி', 'மைசூர்பாணி', 'காஞ்சிபுரம் பாணி' ஆகியவை ஆகும்.

கும்மி





இது தொன்று தொட்டு வரும் ஒரு நாட்டார் கலை. பலர் வட்ட வடிவாகவோ, பிறமாக சரி சமமாகவோ நின்று இசைக்கு தக்கவாறு தன் கைகளைத் தட்டி கால்களையும், இடுப்பையும், தலையையும் அழகாக அசைத்து, குனிந்தும் நிமிர்ந்தும் கூட்டமாக ஆடும் ஒருவகைக் கூத்து அல்லது நடனம். இரு ஆகும்

கரகாட்டம்




தலையில் பல விதங்களில் அலங்கரிக்கப்பட்ட கரகத்தை வைத்தபடி, சமநிலை பேணிஆடும் இது பாரம்பிய ஆட்டங்களில் ஒன்றாகும். கரகம் என்பது ஒரு பானை வடிவ கமண்டலத்தைக் குறிக்கும். சங்க இலக்கியங்களில் கரகாட்டம் குடக்கூத்து என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கரகாட்டம் மேலும் பல வகைகளாகப் பிரிக்கப்படுகின்றது. அவையாவன...
ஆட்ட கரகம் - பக்தி கலந்து கோவில்களில் ஆடப்படுவது.
சக்தி கரகம் - பொது மக்களுக்கு முன் அல்லது பொது நிகழ்வுகளில் ஆடப்படுவது.

காவடி
முருகப்பெருமானை துதிக்கும் பக்தர்களால் முறைப்படி அழகாக வில் வடிவில் அமைக்கப்பட்ட ஒருவகை பொருளாகும். இதனை தலையில் சுமந்து ஆடும் ஆட்டமே காவடி எனப்படுகின்றது.

காவடியில் இருவகை உள்ளன.

அவை முறையே


தூத்துக்குடி காவடி - முற்கம்பிகளினை, ஒருவரின் முதுகுத் தோலில் குத்தியெடுத்து, பின் வண்டியொன்றின் மீது ஏற்றி, அவரைச் சுமந்து ஊர்வலம்அழைத்துச் செல்வதாகும்.

பாற் காவடி - வில் வடிவில் அமைக்கப்பட்டு தலையிலும், தோளிலுமாக சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவராலும் அதிகமாகஆடப்படுகின்றது.

மேலும் காவடியில் சில வகைகள் உள்ளன.
அவையாவன வருமாறு...

பால் காவடி
பன்னீர்க் காவடி
மச்சக் காவடி
சர்ப்பக் காவடி
பறவைக் காவடி - தூக்குக் காவடி

பறை ஆட்டம்



பறையாட்டம் உணர்ச்சி மற்றும் எழுச்சி மிக்கது. இதுவும் தமிழரின் பாரம்பரிய நடனங்களில் ஒன்றாகும். அதாவது தோலால் உருவாக்கப்பட்ட பறையை கொண்டு இசையை உருவாக்கி அவ்வோசைக்கேற்ப ஆடப்படும் ஆட்டமே பறையாட்டம் எனப்படுகின்றது. பறையைவிட அதிர்வு குறைந்தமெல்லிய இசைக்கருவிகளுக்கேற்ப பறையாட்டத்தின் வீரியமிக்கஅசைவுகளை கட்டுப்படுத்தி உருவாக்கப்பட்ட நடனமே "சதிராட்டம்".

மயிலாட்டம்







இது மயிலின் தோகையை உடையுடன் சேர்த்து, ஒடுக்கியும் விரித்தும்ஆடக்கூடியவாறு உடை செய்யப்பட்டிருக்கும். மயிலின் ஆட்டத்தைஅல்லது அசைவுகளை ஒத்து இந்த ஆட்டம் அமையும். இது தமிழரின் நாட்டார் ஆடற் கலையாகும்.

கோலாட்டம்








இரு
கைகளிலும் கோல்களை ஏந்தி ஒன்றுடன் ஒன்றை தட்டி ஒலி எழுப்பிஇசைக்கேற்ப ஆ
டப்படும் ஆட்டம் கோலாட்டம் ஆகும். குறிப்பாக பெண்கள்வட்டமாக நின்று கோல்களை மாறி மாறி அடித்து, பாடி, ஆடுவர். இது ஒருநாட்டார் கலை. தமிழ் ஊர்களில் இது தொன்று தொட்டு ஆடப்படுகிறது.

பொய்க்கால் குதிரை ஆட்டம்







குதிரைக் கூடு அணிந்து அதன் மேல் சவாரி செய்வது போல் பாங்கு செய்துஆடப்படும் ஆட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆகும். இந்த ஆட்டம் தோன்றியதாக கூறப்படுகிறது. ஆணும் பெண்ணும் இராசாஇராணி போன்று வேடமிட்டு ஆடுவதுண்டு. மேலும் கால்களில் உயரமான தடிகளைக் கட்டிக் கொண்டும் ஆடப்படிகின்றது. தஞ்சாவூடில்

பொம்மலாட்டம்






பொம்மையை
வைத்து ஆட்டும் நாடகம் பொம்மலாட்டம் எனப்படுகின்றது. இது மரபுவழிக்
கலைகளில் ஒன்று. மரப்பாவை கூத்து என்றும் குறிப்பிடுவர். நூற்களால் பொம்மைகளை ஆட்டி கதை சொல்வது, கையில் பொம்மையைவைத்து கதை சொல்வது என பொம்மலாட்டம் பல வடிவங்களைக்கொண்டது.

புலியாட்டம்






புலி
போன்று வேடமிட்டு ஆடப்படும் ஆட்டம் புலி ஆட்டம் ஆகும். வரிப் புலிபோல் மஞ்சள், கறுப்பு, இளஞ்சிகப்பு வண்ண பூச்சுக்களால் உடலைப் பூசுவர். புலிமுகமுடைய முகம்மூடி, புலிக்காது, புலிவால், புலி நகங்கள் ஆகியவைஅணிவர். கா
லில் சலங்கையும் கட்டுவர். புலி ஆட்டத்தை ஒத்து கரடிஆட்டம், மாடு ஆட்டம், கிளி ஆட்டம் போன்ற பிற ஆட்டங்கள் உண்டு.

தேவராட்டம்




தலைப்பில் தலைப்பா கட்டி, இடுப்பில்துண்டு கட்டி ஆடுவர். உருமி மேளம், பறை மேளம் ஆகியவைதேவராட்டத்தின் போது பயன்படுத்தும் இசைகளாக இருக்கின்றன. இது தேவர், கம்பளத்து நாயக்கர் எனும் சமூகத்தினரின் கோவில் விழாக்களிலும், வீட்டுவிழாக்களிலும் இந்த நடனம் இல்லாமல் இருப்பதில்லை. இதை ஒருசடங்காகவே வைத்திருக்கின்றனர்.

இவ்வாறாக தமிழ் ஆடற்கலைகள் நம்மவர் மத்தியில் இன்றும் பேணப்பட்டு வருகின்றது.

Comments

Vijay said…
தமிழர் ஆடற்கலை பற்றிய அழகான பல விடையங்களை தந்தீர்கள் நன்றி

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

29. தவிப்போடு ஒரு மனசு