*****நீயும் தேடலும்*****

வாழ்வை உனக்கும் சேர்த்து
அனுபவித்தவள் தான்
இன்று உன் வாழ்க்கை புத்தகத்தின்
நீ திருப்ப விரும்பாத பக்கம் நான்!

உனைத் தொடர்ந்த என்னை
உன் நிழலாய் தேடித் தேடி
நொந்து போகின்றாய்
ஏனோ உனக்குள்
எனைத் தேட மறந்து!

உன் வார்த்தை கீறல்களின்
வலி தாங்காமல்
குரல் கொடுக்கும்
என் இதயத்தை;
உன் உரிமைக்குரலுக்கு
எதிர் வாதம் செய்கின்றது என
குற்றம் சாட்டுகின்றாய்!

தொட்டணைத்துக் கொள்வவும் பின்
விட்டு விலகிச் செல்வதும்
மரண வலி தான்;
உன் போ என்ற வார்த்தை
கசிவுகள் தந்தது
இரத்தக் கசிவை
மரண வலி மிஞ்சிவிட்டது
உன் வார்த்தை!

உன் நலம் கேட்பதும்,
உன் நிலை அறிவதும்...
உணர்வுகளும் உன்னை
நினைவில் கொண்டதனால் தான்!

கேட்டதற்காக பதில்
கூறிச் செல்கின்றாய் என
இப்போது தான் உரைக்கின்றது!

நீளுகின்றது காலம் நீட்சி கொண்டு
நேற்று போலவே
உன்னையும் என்னையும்
சுமந்து இன்றும்!

ஏனோ நேற்று நாமாக...
இன்று நீ எங்கோ...
நான் எங்கோ....
எதிர் எதிர் துருவங்களாக!

சிலந்தி வலையான
என் வாழ்வின் சிக்கலுக்குள்
உன்னையும் இணைத்து
இன்பமுற்றேனோ?

புரியாத உறவுகளால்
உதறித் தள்ளப்பட்ட பின்னும்
உறவுகள் வேண்டுமென்ற
ஆசை ஏழை மனதிற்கு வேண்டுமா?

தனிமையும், தலைவலியும்
சொந்தமாகிப் போனது தானே
இன்றெல்லாம்
என் விழி நீரை
ஏந்திக் கொள்வதும்,
அணைத்து ஆறுதல் சொல்வதும்
தலையணை சொந்தங்கள் தானே!

பசித்தால் உணவு
படுத்தால் உன் நினைவு
காலம் கழிகிறது கனவாய்
மனது மட்டும் இன்றும் பாரமாய்!

உனக்கும் எனக்கும்
கருத்து வேறுபாடுகள்
சின்ன சின்ன சண்டைகளும்
எரிமலை தாக்கமாய்
இதயத்தை பந்தாடிச் செல்கின்றது!

நம் அன்புப் பகிர்வுகள் இன்று
சொல்லம்புகள் சுமந்து
விரிசல்கள் பிடித்துக்
கொள்கின்றது கெட்டியாய்

என் கேள்விகளே பதில்
சுமந்து வருவன தானே
நீ தூரமாய் தேடும் பதில்களை
நமக்குள் தேடு!

உன் வாழ்க்கை பக்கங்கள்
வர்ண மை கொண்டு
அலங்கரிக்கப்படும்!

Comments

//உன் வார்த்தை கீறல்களின்
வலி தாங்காமல்
குரல் கொடுக்கும்
என் இதயத்தை;
உன் உரிமைக்குரலுக்கு
எதிர் வாதம் செய்கின்றது என
குற்றம் சாட்டுகின்றாய்!//

//பசித்தால் உணவு
படுத்தால் உன் நினைவு
காலம் கழிகிறது கனவாய்
மனது மட்டும் இன்றும் பாரமாய்!//

அருமையான வரிகள்.

//உன் வாழ்க்கை பக்கங்கள்
வர்ண மை கொண்டு
அலங்கரிக்கப்படும்!//

இதில் உன் என்று வரும்போது கவிதை கூறிவரும் பாத்திரம் விலகிச்செல்வதாய் தோன்றுகிறது.

நம் என்று வந்தால், மேல் கூறியவை அர்த்தப்ப்டும் என்பது என் சிறு கருத்து.


கவிதை நன்று
தொட்டணைத்துக் கொள்வவும் பின்
விட்டு விலகிச் செல்வதும்
மரண வலி தான்;
உன் போ என்ற வார்த்தை
கசிவுகள் தந்தது
இரத்தக் கசிவை
மரண வலி மிஞ்சிவிட்டது
உன் வார்த்தை!
intha varigal un Veethanai ya puriya vaikkinrana


என் கேள்விகளே பதில்
சுமந்து வருவன தானே
நீ தூரமாய் தேடும் பதில்களை
நமக்குள் தேடு!

உன் வாழ்க்கை பக்கங்கள்
வர்ண மை கொண்டு
அலங்கரிக்கப்படும்

unga veethanai pookka enna vazhi ennapathai intha varikal sollkinrana
nice poem
thanks K.eladsian

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

ஹைக்கூ கவிதைகள்

29. தவிப்போடு ஒரு மனசு