தமிழ் மாநாடும் அழகிகளின் குத்தாட்டமும்


நாயகனை சிரசை பிடித்து ஆட்டுகிறது பரபரப்பாக பேசப்பட்ட உலக தமிழ் மாநாடு. இருக்கும் சிங்கத்தை எழுப்பிடாதீங்க எழுந்தால் இருப்பது கடினம் என்கின்றது இன்னொரு சோசலிசம். எதற்காக இதெல்லாம்னு கேட்டால் எல்லாம் இருக்கும் நாற்காலியை இறுக்கி பிடித்துக் கொள்கின்றதுக்கான நீர்மூழ்கி யோசனை தான் என்கின்றது ஒரு தரைப்படை. தமிழக தலைவர்கள் அணிவகுத்து மாநாட்டை அர்ப்பணிப்பு உணர்வோடு நடத்தி கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுவதோடு தமிழ் கொண்டு பிழைத்தவர்களின் தமிழ் கொன்று துணை போன நிலை மறைப்பதற்காகவே இந்த ஏற்பாடு என்கின்றது சிங்கத்தின் நெருங்கிய வட்டாரம்.

இது வரை திகதி மாற்றங்களோடு போராடி வந்த உலகத் தமிழ் மாநாடு இன்று பெயரையே பிரச்சினையாக கொண்டு வந்த நிலையில் உலகச் செம்மொழி மாநாடு என பெயர் மாற்றப்பட்டது. மேலும் உறவுகளாம் உயிர்களைப் பறி கொடுத்து உணவுக்கும், உறைவிடத்திற்கும், உயிருக்குமே போராடும் நம் தமிழர்கள் இத்தனை துயரங்களை அனுபவித்து அல்லலுரும் போது தமிழுக்கு மாநாடு நடத்துவது தேவையா? இது தீப்பிடித்து எரியும் வீட்டுக் கூரையின் மேல் நெருப்பை அள்ளி கொட்டுவதான செயல் என்னும் கருத்துக்களும் கூறப்படுகின்றன. ஆம் உண்மை சுமந்தவை தானே இவ்வரிகள். எத்தனை இழப்புக்கள், எத்தனை ஏமாற்றங்கள் பட்ட காயங்கள் ஆறவில்லை படுப்பதற்கு ஒரு வீடில்லை பாசமான உறவுகள் உயிரோடும் இல்லை எதற்காக இந்த மாநாடு...? எத்தனை ஆயிரங்களை அழிப்பதற்கான முயற்சி இது? ஆட்டம் பாட்டமென கும்மாளமிடும் தனலக்மியை அகதிகளாக அல்லலுரும் அன்பு தமிழ் குழந்தைகளின் வாழ்வு செழிக்க வகை செய்யுங்கள். தமிழ் தாய் உம்மை அணைத்துக் கொள்வாள்.

காடு வா என்குது... வீடு போ என்குது... மனமோ அலை பாயுது ஆசைகள் அத்துமீறுது....

முடிவுகள்?????


இது வரை நடந்து முடிந்த உலக தமிழ் மாநாடு பற்றிய சில தகவல்கள்

முதலாவது உலகத் தமிழ் மாநாடு - 1966ம் ஆண்டு ஏப்ரலில் மலேசியத் தலை நகரான கோலாலம்பூரில் நடைபெற்றது. தனி நாயகம் அடிகளாரின் தலைமையில் இது நடாத்தப்பட்டது.

இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு - 1968ம் ஆண்டு தமிழ்நாட்டுத் தலைநகரான சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் முதல் நாள் சென்னை கடற்கரையில் தமிழ் அறிஞர்களான திருவள்ளுவர், அவ்வையார், கம்பர், ஜி. யு. போப், கால்டுவெல், பாரதியார், பாரதிதாசன், வ. உ. சி, வீரமாமுனிவர், கண்ணகி(சிலப்பதிகாரம்) ஆகியோரின் சிலைகள் திறக்கப்பட்டன.

மூன்றாவது உலகத் தமிழ் மாநாடு - 1970ம் ஆண்டில் பாரிசில் நடைபெற்றது. பேராசிரியர் ஜீன் பிலியோசா தலைமையில் இம்மாநாடு நடைபெற்றது.

நான்காவது உலகத் தமிழ் மாநாடு - 1974ம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை யாழ்ப்பாணத்தில் வீரசிங்கம் மண்டபத்திலும், யாழ். றிமர் மண்டபத்திலும் சிறப்பாக நடைபெற்றது. வண. சேவியர் தனிநாயகம் அடிகளாரால் நடாத்தப்பட்டது.

ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு - 1981ம் ஆண்டு மதுரையில் நடைபெற்றது.

ஆறாவது உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் நடைபெற்றது.

ஏழாவது உலகத் தமிழ் மாநாடு - மோரிஷஸில் நடைபெற்றது.

எட்டாவது உலகத் தமிழ் மாநாடு - 1995ம் ஆண்டு தஞ்சாவூரில் நடைபெற்றது.

ஒம்பதாவது உலகத் தமிழ் மாநாடு - எங்கே...? எப்போது...?

அதன் பிறகு உலகத் தமிழ் மாநாடு சார்ந்த பேச்சுக்கள் அமிழ்ந்துவிட்ட நிலையில் 13 வருடகாலங்களைக் கடந்து தற்பொழுது ஏதோ ஒரு உள், வெளி நோக்கோடு உலகத் தமிழ் மாநாட்டை நடாத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது என்றாலும் எதிர்ப்புக்களை குமித்துக் கொண்டிருக்கின்றது. மேலும் இம்மாநாடு அடுத்து வரும் 2010 ஜனவரி மாதம் 21ம் திகதி அன்று நடாத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இக்குறித்த திகதியில் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இத்திகதியும் மாற்றப்படலாம் மாற்றப்படாமலும் இருக்கலாம். எல்லாம் ஏட்டு ஓட்டை பொருத்தே... :)

பரபரப்பாக பேசப்பட்ட இந்த நிகழ்வு சார்ந்த விடயங்களில் ஆரம்பித்த குழப்பங்கள் இன்று பெயரலவில் உயர்ந்து நிற்கின்றது. அது சரி இன்றைய உலகத் தமிழ் மாநாட்டின் நோக்கம் தான் என்ன? இன்று வரை புரிந்து கொள்ளக்கூடியதாக இல்லை. யாராவது அங்கு என்ன நடக்கும் என்று ஊகிக்க முடிந்தால் அறியத் தாருங்கள். நடிகைகளின் குத்தாட்டம் விருந்தாகும் எனவும் பரிசில் வழங்கலும் காண இருப்பதான தகவல்கள் வெளிவந்துள்ளன. இது தான் தமிழ் வளர்க்கும் முயற்சியோ.... என்ன கொடுமை இது...?

Comments

நல்ல அலசல்!

//எல்லாம் இருக்கும் நாற்காலியை இருக்கி பிடித்துக் கொள்கின்றதுக்கான//

"இறுக்கி" :)
Vijay said…
எத்தனை தமிழ் மாநாடுகள் நடைபெற்றபோதும் நடைப் பிணமாகவே தமிழினம்... மீண்டும் ஓர் மாநாடு எதற்காகவோ புரியவில்லை
Unknown said…
//நான்காவது உலகத் தமிழ் மாநாடு - 1974ம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை யாழ்ப்பாணத்தில் வீரசிங்கம் மண்டபத்திலும், யாழ். றிமர் மண்டபத்திலும் சிறப்பாக நடைபெற்றது. வண. சேவியர் தனிநாயகம் அடிகளாரால் நடாத்தப்பட்டது.//

தங்கச்சி இங்கு சிறப்பாக என்பதன் கருத்து என்ன..?அன்று தானே எமக்கான தலைவிதியை இந்த அரசு நிர்னயித்தது..
அதனை தொடர்ந்து நடாத்தி முடிக்கப்பட்ட அந்த படுகொலைகளை மறந்து விட்டீர்களா..அதை குறிப்பிட்டிருக்கவேண்டுமல்லவா அது தானே உங்கள் இந்த பதிவுக்கு முழுமை கொடுக்கும்.
குத்தாட்டத்திற்கு அழகிகள் தயாராகின்றனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. செம்மொழி மாநாட்டிலும் சினிமா நடிகைகளா? என்ன கொடுமை இது.
//வந்தியத்தேவன் said...
குத்தாட்டத்திற்கு அழகிகள் தயாராகின்றனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. செம்மொழி மாநாட்டிலும் சினிமா நடிகைகளா? என்ன கொடுமை இது//

என்ன வந்தியத்தேவன் தமிழரா இருந்துட்டு இது கூட தெரியாம இருக்கிறீங்க. குத்தாட்டம் இல்லாம தமிழ்நாட்டில் ஏதாவது விடயம் நடக்குமா? அதிலும் நம்ம கலைஞர் ஐயா கலந்து கொல்லும் (எழுத்து பிழை அல்ல) நிகழ்ச்சியில் கலா அக்கா வின் நடனக்குழுவின் கெமிஸ்ட்ரி நடனங்கள் கட்டாயம் இருக்கும் என்பது எழுதப்படாத விதி..
வேதனையை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.. பார்க்கலாம் என்ன நடக்கிறது என

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

91.தமிழர் ஆடற்கலை வடிவங்கள்

29. தவிப்போடு ஒரு மனசு