யார் இந்த பதிவர்???


அவரவர்களுக்கென்று தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள், விஷேட தன்மைகள் காணப்படும். ஒரு குறித்த நபருடைய போக்கு ஏனையவர்களுடையதோடு எத்தனை வீதம் பொருந்துமென கணக்கிட்டு பார்த்தால் மிகக் குறைந்தளவாகவே காணப்படும். என்னடா தலைப்புக்கும் கருத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையே என யோசிக்கின்றீர்களா? தொடர்பு இருக்கு......

கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சக வலைப்பதிவர் ஒருவரை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது அப்போது அவரோடு கலந்துரையாடியதில் அவரை பற்றிய சில தகவல்களை தெரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. அவர் சார்ந்த தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகின்றேன். அத்தோடு உங்களுக்கும் ஒரு வேலை இருக்குங்க. யார் இந்த பதிவர்னு சரியாக கண்டு பிடித்துவிடுவீர்களானால் உங்களை இந்த பதிவர் ஸ்பெஷலோட விருந்தாளியாக அறிமுகப்படுத்துவோம்.

எப்போதும் சிரித்துக் கொண்டும் ஏனையவர்களை சிரிக்க வைத்துக் கொண்டும்இருக்கும் இவரை பற்றி நீங்களும் கண்டிப்பா தெரிந்து கொள்ளனும். இவரை பற்றி சொல்ல வேண்டுமென்றால் இவர் ஒரு சிறந்த வலைப்பதிவர். அனேகமான பதிவுகள் இட்டுள்ளார். என்னவோ தெரியவில்லை நடிகைகளுக்கும் இவருக்கும் நிறைய தொடர்பிருக்கு. நடிகைகளைப் பற்றி எழுதவில்லை என்றால் தனக்கு தூக்கமே வருவதில்லை என சொல்கின்றார். மற்றும் பின்னூட்டம் இடுவதிலும், தனது கருத்துக்களை தெளிவாக உள்ளபடி சொல்லிவிடுவதிலும் வல்லவரான இவர் தன்னை ஒரு நல்லவன் எனவும், பாலகன் எனவும் அடிக்கடி சொல்லிக் கொள்வார். சக பதிவர்களை ஊக்குவிக்கும் சிறந்த பண்பும் கொண்டவர். என்னவோ கருணாநிதி மீதும், வைரமுத்து மீதும் தனி மரியாதையே வைத்துள்ளார். இவரை பற்றிய அறிமுகம் போதுமானதென நினைக்கின்றேன். இத்தோடு அவரோடு உரையாடிய போது அவர் தந்த தெளிவானதும் சுருக்கமானதுமான பதில்கள் என் கேள்விகளோடு இதோ உங்களுக்காக... :)

சந்திப்பு

உங்களுக்கு பிடித்தது - அழகான பெண்கள், இளையராஜா இசை, கமல் படம், சுஜாதா நாவல்கள், தூக்கம்

பிடிக்காதது - விதண்டாவாதம் செய்பவர்கள்

படித்தது - IT

படிக்காதது - எஞ்சினியரிங்

ப்லஸ் (+) - திறந்த புத்தகம், என் கருத்தை அப்படியே சொல்வது

மைனஸ் (-) - அடிக்கடி கோபம், யாரையும் நம்பிவிடுவது

பிடித்த உணவு - சோறும் பருப்பும்

பிடிக்காத உணவு - தோசை

உங்கள் நண்பன் - ரவிராஜன், தயாபரன், ஜெயந்தன்

உங்கள் நண்பி - தமயந்தி, துஷ்யந்தி ( நண்பிகள் குறைவு என்ற கருத்தையும் உடனே சொல்லிவிட்டார் ஆனால் நான் அதைப்பற்றி எதுவும் கேட்கவில்லை)

நட்பை பற்றி - உடுக்கை இழந்தவன் கை

காதலை பற்றி - அனுபவிக்கவேண்டியது ஆனால் ஆபத்தானது (அனுபவம் பேசுகிறதோ.....)

நட்பு காதலாவதை பற்றி -புரிந்துணர்பு அதிகரிக்கும்

பிடித்த நபர் - அம்மா

பிடிக்காதவர் - எவரும் இல்லை (என்ன ஒரு தங்கமான மனது)

ஆண்களை பற்றி - ஆண்கள் சுயநலமற்றவர்கள்

பெண்களை பற்றி - பெண்கள் சுயநலமானவர்கள்

இயற்கை - என் நண்பன் (இவரோட நட்பு மிகக் சிறந்தது என அவர் வார்த்தைகள் கூறுகின்றன)

ரசித்தது - தாவணிப் பெண்கள், நுவரேலியா மலைகள், மலேசியாவின் லங்காவி , என் பாடசாலைக் கடற்கரைஎனப் பட்டியல் நீளும்....

மௌனம் - பேசாமல் பேசும் விடயம்

தனிமை - சிந்திக்க வைக்கும்

கணனி - என் உயிர்

கவிதை - ரசிப்பது

உங்களுக்கு பிடித்த ஒரு கவிதை (சொந்தமானாலும் ஓகே சுட்டதானாலும் ஓகே) - சொந்தமானதா? ha Ha இல்லை.

சுட்டது - எனக்குள் இருக்கும் நீயும்
உனக்கும் இருக்கும் நானும்
நமக்குள் இருக்கும் இதயங்களைப் பார்த்துக்கொள்ளும்
வா காதலிப்போம்

வெற்றி - நல்ல நண்பர்களை இன்னமும் வைத்திருப்பது

தோல்வி - தோல்வி 6ஆம் ஆண்டு புலமைப்பரிசில் தோல்வி

அடி வாங்கியதுண்டா - ஓம் ஓம் பாடசாலை நாட்களில் ஆசிரியர்களிடமும் அதிபரிடமும் குழப்படிக்காக வாங்கியது

அனுபவம் - அதிகம்

சிரிப்பு - எந்த நேரம் சிரிப்புதான்

அழுகை - சித்தப்பா இறந்த நேரம் அழுதது (பெற்ற அப்பா இறந்தாலே அழ யோசிக்கும் உலகில் அன்பான பிள்ளை)

பலம் - புன்னகை

பலவீனம் - கோபம்

தெய்வம் - பிள்ளையார்

பணம் - மனிதர்களை மிருகமாக்குவது

அழகு - பிறந்த குழந்தை

அடிமை - கணனிக்கு அடிமை

சுதந்திரம் - பறிகொடுத்துவிட்டோம்

உரிமை - விட்டுகொடுக்கமாட்டேன்

உணர்வு - தமிழன்

கடமை - நல்ல மனிதன்

உண்மை - பொய்யின் அண்ணன்

பொய் - உண்மையின் தம்பி

தமிழ் - என் உயிர்

தமிழன் - உலகில் அடிமையான இனம்

மதிப்பு - மரியாதை

அன்பு - அம்மா

அன்னை - வாழும் தெய்வம்

தெய்வம் - இன்றைய காலத்தில் மலிவான ஒன்று

ஹீரோ - அவர் தான்

வில்லன் - இவர் தான் (இது எனக்கு புரிந்தது... உங்களுக்கு புரிகின்றதா?)

வாழ்க்கை - அனுபவிக்க வேண்டியது

வறுமை - கஸ்டம்

நான் என்பது - தற்பெருமை

நாம் - அடம்பன் கொடி

மனிதன் - மிருகமாகிவிட்டான்

மிருகம் - அப்பிராணி

தீர்ப்பு - சட்டத்தின் தண்டனை

மருத்துவம் - உயிர்களைக் காப்பது

விஞ்ஞானம் - உயிர்களை அழிப்பது

படிப்பு - தகுதி

இனிக் கேள்விகளை கொஞ்சம் பம்பலாக்கலாமே சீரியசாகப் பதில் சொல்லிகளைத்துப் போனேன் என அவரே சொன்னதனால் கொஞ்சம் மாற்றத்தோடு தொடர்ந்தோம்

அவசரம் தெரியாமல் அறுப்பவனை என்ன செய்யலாம் - திரும்ப அறுக்கலாம்

தொடர்ந்து கேள்வி கேட்டு கொண்டே இருந்தால் - ஆளை மாற்ற வேண்டும் (என்னையும் ஒரு மாதிரியாக பார்த்துக்கொண்டே தான் இந்த பதில் சொன்னார்)
அடிக்க வந்தால் - திருப்பி அடி இல்லையென்றால் ஓடு

ஒரு கண்ணத்தில் அடித்தால் - மறு கன்னத்தில் முத்தம் கொடு

பேயை கண்டால் - மனைவியாக்கு ஏனென்றால் இரண்டும் ஒன்றுதான் (இவர் மனைவியாக வருபவரிடம் இதை பற்றி உரையாட வேண்டும்)

மனைவி - அழகுராணி (பேயை அழகு ராணி என்கின்றார் ஒன்றுமே புரியவில்லையே.....)
கல்யாணம் - சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டு நரகத்தில் தள்ளுவது

கனவு - இலவசமாக கிடைக்கும் விடயம்

பிடித்த ஜோக்கர் - நான் தான்

ஜோக்கரே ஒரு ஜோக் சொல்லுங்கள் - நான் ரொம்ப அழகு (ஜோக் என்று சொன்னதால் விட்டுவிட்டேன்)

ஒரு பொய் சொல்லுங்கள் - கீர்த்திக்கு அறிவு ஜாஸ்தி (சிலர் பொய் சொல்ல சொன்னால் உண்மையை சொல்வாங்கன்றது இது தானா?)
ஒரு கிணற்றுக்குள் உங்களை தள்ளினால் - நீந்தி வந்துவிடுவேன்

முதலையாக நீங்கள் மாறினால் - கடிப்பேன் (இவரோடு நெருக்கமாக உரையாடுபவர்கள் கவனம் நான் தள்ளி நின்று தான் பேசினேன்)

ஒரு நாள் ஜனாதிபதியானால் - என்ன செய்வது என யோசித்தே அந்த நாளைவீணடித்துவிடுவேன்.

சாகா வரம் பெற்றால் - வருடத்துக்கு ஒரு மனைவி (ஆசை யாரை விட்டது)

உங்கள் சாதனை - 3 வருடங்களாக வலையில் குப்பை கொட்டுவது

உங்கள் பொறுமை - பொறுமையா அப்படியென்றால்?

உங்களை யாராவது அழகென்றால் - சந்தோஷப்படுவேன் ஆமாம் அழகனைஅழகன் என்னாமல் அழுக்கன் என்றா சொல்வார்கள் (இது கொஞ்சம் ஓவர் என்றேன் உடனே எனக்கு ஒரு நாளும் ஓவராகுவதில்லை என்றார் அளவோடு தான் அமிர்தமோ.....?)

உங்களை யாராவது அசிங்கம் என்றால் - அவர்களின் ரசனை இவ்வளவுதான் என
நினைப்பேன்

வழுக்கை விழுந்தால் - மொட்டை அடிக்கவேண்டியதுதான்

வழுக்கி விழுந்தால் - அடிபடும்
மொக்கையா ஏதாவது சொல்லுங்களே - அடப்பாவி என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டு விட்டீர்களே

சம்பளத்தில் பாதி - பிற செலவுகள்

நீங்கள் பாட்டு படித்தால் - விருது கிடைக்கும் (கழுதைகளோடு தானே போட்டி என கேட்டுக்கொண்டார்)

நேரமாகின்றதா - இல்லை எனக்கு பசிக்கிறது (என்னோட தொல்லை தாங்க முடியவில்லை என்பதை எப்படி சொல்வதென தெரியாமல் ஒருவாறு பசி என காரணம் கூறி நான் அடுத்த கேள்வியை தொடங்கும் முன்பாகவே மீண்டும் சந்திப்போம் என முடித்து விட்டார்.)

பதிவர்களே இவர் யாரென்பதை உங்களால் ஊகிக்க முடிகின்றதா? ஊகித்தவர்கள் உங்கள் பதிலை பின்னூட்டத்தில் இடுங்கள். நீங்கள் சரியான நபரை தேர்வு செய்வீர்களானால் நீங்களே இந்த பதிவர் ஸ்பெஷலின் விருந்தாளி. மீண்டும் இது போன்ற இன்னுமொரு பதிவர் சந்திப்போடு உங்களை வெகு சீக்கிரம் சந்திப்பேன்.

நன்றி

Comments

பல தரப்பட்ட தகவல்களின் பின்னர் நீங்கள் குறிப்பிட்ட நபர் வந்தியத்தேவன் என்பதில் சந்தேகமேயில்லை.

சில விடயங்கள் வந்திக்கும் லோஷனுக்கும் பொதுவாக இருந்தாலும் இன்னும் திருமணமாகவில்லை என்பதை நீங்கள் கூறியதிலிருந்து இது வந்தி என நினைக்கிறேன்.
Vijay said…
யாரென்று புரியமாட்டேங்குதே என்ன பண்ணுறது.... கீர்த்தி என்கிட்ட பேசாம சொல்லுங்களன் யாரென்று புரியமாட்டேங்குதே என்ன பண்ணுறது.... கீர்த்தி என்கிட்ட பேசாம சொல்லுங்களன் plz
ஆதிரை said…
ஆஹா...
இவர் என்னுடைய நண்பராச்சே..

பாட்டு படித்தால் - இவருக்கு வாந்தி வரும்.
மன்னிக்கவும் யூகிக்கமுடியவில்லை...
யாரது?
கண்டு பிடி அவரை கண்டு பிடி அந்த பதிவர் யாரென கண்டு பிடி :) சொல்ல மாட்டேனே :) :) :)
Vijay said…
ஓஓஓ சிரிச்சவாயர் தானே நம்ம லோசன் அண்ணா ..... அப்போ இந்த பதிவர் ஸ்பெஷலின் விருந்தாளி நான்தானே
ரூம் போட்டு யோசிச்சன்.... but முடியல... இப்பவே கண்ணக்கட்டுதே
ARV Loshan said…
ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டேன்.. நம்ம பாலகன், மஜா புகழ், யானை மணாளன் வந்தியத்தேவன் என்ற எங்கள் வீரத் தளபதி தானே? ;)

முழுக்க வாசித்துவிட்டு பின்னூட்டுகிறேன்.. நல்லாப் போகுது
ARV Loshan said…
நம்ம நண்பர் கலக்கி இருக்கிறார்.. சுவையான பதில்கள்.. உங்கள் கேள்விகளால் மனிதரை பிடுங்கி எடுத்திருக்கிறீர்கள்..]
வந்திக்கு பொறுமை ரொம்பவே அதிகம் தான்..
வேற யார்.. எங்கட சாட்சாத் வந்தியத்தேவன்தான்...
Subankan said…
வந்தி அண்ணாவா?
maruthamooran said…
அது நம்மட ‘வந்தியர்’ என்று எனக்கு தெரியும். கீர்த்தி விருந்தினை ஒழுங்கு செய்துவிட்டு விரைவில் அழைப்பை அனுப்பவும்.
நம்ம வால்ட்டர் வந்திதானே..?
பேட்டி கலக்கல் கீர்த்தனா..:-)
நீண்ட நாட்களின் பின் மீண்டும் வலைப்பூக்களின் பக்கம்.. நன்றாக இருக்கின்றது பதிவு.. கேள்விகளும் பதில்களும் அசத்தல்..

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

ஹைக்கூ கவிதைகள்

29. தவிப்போடு ஒரு மனசு