பம்பலபிட்டியில் அரக்க வேட்டை
நேற்று முன் தினம் பம்பலபிட்டியில் கடலுக்குள் தள்ளி ஒருவரை துடிக்க துடிக்கஅடித்து கொன்ற அரக்கத்தனம் மனதை பதைக்க வைக்கின்றது. ஆம் மனிதநேயம், மனசாட்சியை பற்றி பேசிக்கொண்டிருந்தோம் இன்று மனிதர்களா? அரக்கர்களா நம் தேசத்தில் வாழ்கின்றார்கள் என சிந்திக்கும் வகையில் மனிதபடுகொலைகளும், சித்திர வதைகளும் பெருகிவிட்டது. மனிதம் மிருக வெறிகொண்டு மிருக வேட்டை கொள்கின்றது. உயிர் மறித்த மிருகங்களுக்கும்நாளுக்கு நாள் மாறும் விலையுள்ள இந்த தேசத்தில் மனித உயிர்களுக்கு விலைஇல்லை என கொன்று குவிக்கப்படுகின்றது உயிரின் பெறுமதி தெரியாமல்.
29/10/2009 அன்று பம்பலபிட்டியில் வாகன நெரிசலுக்குள் வாகனங்கள் மீது கற்களை கொண்டு தாக்கியதாகவும், ஆட்களின் மீது கற்களை கொண்டு தாக்கியதாகவும் கூறி அவரை தடுத்து நிறுத்துவதற்கு பதில் அவரின் உயிரையே பறித்த அசம்பாவிதம் ஏற்றுக் கொள்ள முடியாதது. இங்கேசடப்பொருட்களுக்குள்ள முக்கியத்துவம் மனித உயிர்களுக்கு இல்லையேஎன்பது வேதனையை தருகின்றது. கொலை செய்யப்பட்ட அக்குறித்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஒருநோயாளியை வன்முறை செய்தவரை போல கொடூரமாக கொலைசெய்யப்பட்டது எவ்விதத்தில் நியாயமாகும்???
இவ்வாறான நிகழ்வுகள் கண்டிக்கவும், தண்டிக்கவும் பட வேண்டியவை என கூறிதாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றசெய்திகள் வெளியான போதும் எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுஎன்பது தெரியாமலேயே உள்ளது. என்ன தான் நடவடிக்கை எடுத்தாலும் போனஉயிர் திரும்பி வரப்போகின்றதா??? அந்த குறித்த நபரின் குடும்பத்தினரின்கண்ணீருக்கான பதில் தான் என்ன??? அவர்களின் வலிக்கு மருந்து தான் என்ன??? அவரின் இழப்பை ஈடு செய்யும் பொருட்டு இவர்கள் செய்தது தான் என்ன??? இவை அனைத்தும் கேள்கிக்குறிகளோடே!
எம் தேசத்தில் நீதி தேவைதை இன்னும் தன் கண்களைக் கட்டிக் கொண்டு தான்இருக்கின்றதா??? நிரபராதிகள் தண்டிக்கப்படலும், குற்றவாளிகள் தப்பித்ததும்தாண்டி குற்றவாளிகளே தண்டனை வழங்கிக் கொண்டிருக்கும் கொடுமை. இந்தகாட்டுமிராண்டித்தனம் ஒழிக்கப்படுவது எப்போது???
நம் வரும் தலைமுறை வாழப் போவது இதய பூமியிலா? இரத்த பூமியிலா? இன்றுகாணும் இடமெல்லாம் அச்சத்தோடு வெறிக்கும் கண்கள் அங்கே ஏக்கமும், ஏமாற்றமும், வெறுப்புமே குடிகொண்டதாக இவர்களின் உணர்ச்சித் தீயினைஅள்ளித் தெளிக்காமல் புதைக்கின்றது.
உலகினிலே ஆறரிவாய் ஓரறிவை மேலதிகமாக கொண்ட மனித இனம், இன்றுஆறாவதறிவை தொலைத்து விட்டு திரிகின்றதா??? வக்கிரத்தனம் மட்டுமேஇன்னும் ஓங்கி நிற்க உயிர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படாமல்அழிக்கப்படுகின்றது. மனித உடல் மாமிச பிண்டமாகவே பார்க்கப்படுகின்றதுகொடுமை............ கொடுமை........... கொடுமை..............
இது தானே உங்கள் அனைவரின் மனதினையும் குடைந்து வெளிவரும்எண்ணங்கள் என் மன நிலையும் இவ்வாறே காணப்பட்டது. ஆனால் இது சார்ந்ததீவிர விசாரணைகளைத் தொடர்ந்து கிடைக்கப்பட்ட தகவலானது சம்பவம்நிகழ்ந்த தருணத்தில் அவர் ஒரு மன நோயாளி என்பது யாரும்அறிந்திருக்கவில்லை என்பதும், மேலும் இவரை தடுத்து நிறுத்துவதற்கு முயற்சிசெய்த வேலையில் அவராகவே கடலை நோக்கி ஓடியதாகவும் அவரைதடுப்பதற்காக தொடர்ந்து சென்ற நபர்கள் மீது தொடர்ச்சியாக அவர் கற்களைவீசினார் என்பதும் மேலும் கரையை நோக்கி வர மறுத்து அவரே கடலுக்குள்மூச்சடக்கி இறந்தார் என்பதும், அவர்கல் அடித்த அடி அவர் மீது படவில்லைஎன்பதும் அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. எனவே இதனை ஒரு கொலைமுயற்சியாக கருத முடியாது ஆனால் தற்கொலையை தூண்டும் முயற்சியாகஅமைந்ததை ஏற்றுக் கொள்ள முடிகின்றது.
இதோ இத்தோடு அந்த சம்பவத்தின் video link இனை இணைக்கின்றேன்.

Comments
ஊரோடி பகீ