48. வாழ்க்கை என்றால் என்ன?
தொலைபேசி சிணுங்கியது மறுமுனையில் நண்பன் “வாழ்க்கை என்றால் என்ன? எதில் ஆரம்பித்து, எங்கே முடிகிறது? சௌந்தர்யமானதா? வறுமையானதா? இன்பனானதா? துன்பமானதா? அதில் என்னென்ன இருக்கும்? மீண்டும் அழைக்கிறேன் என்ற ஒற்றை வார்த்தையோடு தொடர்பைத் துண்டித்தேன் நண்பன் எனக்குள் எழுப்பிய பல்வேறான வினாக்களைத் தொகுப்புக்களாக ஏந்தி பயணிக்கத் தொடங்கினேன் எனக்குள்ளான எல்லா வினாக்களுக்கும் விடைத்தேடியே திரும்ப வேண்டுமென்ற ஒரு திடமான எண்ணத்தோடு தெருவோரமாக நடக்கத் தொடங்கினேன்! அங்கே....! குழந்தைகள் தன்னை மறந்து குதூகலமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள் அவர்களின் சிரித்த முகம் வாழ்க்கை இன்பம்! சிறிது தூரம் நடக்கின்றேன்.......! தன் பலம் அனைத்தையும் ஒன்றாய் திரட்டி ஆசை மனைவியைத் தாக்கிக் கொண்டிருக்கின்றான் ஒரு வீரன் அவளின் அழுகுரல், கண்ணீர் வாழ்க்கை துன்பம்! மீண்டும் நடக்கின்றேன்....! ஒரு வீட்டில் மகளின் பிறந்த நாள் விழாவாம் தெருமுனைவரை அலங்கரிக்கப்பட்டு ஆட்டமும் பாட்டமும் வருவோர் போவோருக்கெல்லாம் பரிசில்கள் ...