14. புரியாமை

எனக்குள் ஏன் இத்தனை
தவிப்புக்கள்
துடிப்புக்கள்
தடுமாற்றங்கள்
மீண்டும் மீண்டும்
எனை நானே கேட்கின்றேன்
இருந்தும் முற்றுபெறாமல்
என் வினாக்கள்
தொடர்கதையாய்....
நான்.....; நீ.....; நாமாகி
ஈரிரண்டு வருடங்கள்
இருந்தும் ஏன்
இன்னும்
அதே ஏக்கம் என்னுள்
நீ தான் என்னவனாய் விட்டாயே
பின்னும் ஏன் இந்த வலி
உன்னால் நான் இன்பமாக
தான் இருக்கின்றேன்
இருந்தும் ஏன்
எதையோ தொலைத்த உணர்வு என்னில்?

Comments

Popular posts from this blog

ஹைக்கூ கவிதைகள்

இறுதிச்சடங்கு

உறவுகள்!