45. இடைவெளி

உன் பார்வை
பார்த்துத் தானே - நான்
காணும் காட்சிகள்....,

உன் கேட்டல்
திறனால் தானே - நான்
கேட்கும் செய்திகள்....!

உன் பேச்சை
கொண்டு தானே - நான்
பேசும் வார்த்தைகள்....!

உன் இதயம்
தாங்கித் தானே - நான்
துடிக்கும் துடிப்புக்கள்....!

உன் அங்கம்
வாங்கித் தானே - நான்
அசையும் அசைவுகள்....!

எல்லாம் தெரிந்தும் - ஏனடா
நீ இன்னும் தூரமாய்????

Comments

Popular posts from this blog

ஹைக்கூ கவிதைகள்

விழுவியம் காப்போம்

29. தவிப்போடு ஒரு மனசு