15. காயத்தின் கதறல்

நீ இல்லா இரவு தரும்
நிந்திப்பின் நடுவில்
நின்று தான் விடுகின்றது
இதயம்!

நித்தம் நித்தம்
உன் மடியில்;
நிம்மதியாய் களித்துவிட்டு
திடீர் பிரிவு......... தனை
நிராகரிக்கின்றது மனசு!

உன்னால் முடிகின்றது!
என்னால்.......
எனக்குள்.......
மூழ்கடிக்கப்படுகின்றது!

நீ இல்லாத பொழுதுகள்
ஓராயிரம் யுகங்களாயல்லோ
சாகடிக்கின்றது என்னை!

சாய்க்கப்பட்டல்ல,
சருகாக்கப்பட்ட எனக்குள்
சங்கமமாகிய
உன் அலைகள் தான்
மறுபிறப்பு எனக்குள்!

மருந்தும் விருந்தும்
நீதான்
நீ மட்டும் தான்!

இருந்தும் உன்னால்
விழும் கல்லடிகள்
என் கல்லறைகள் தான்!

எத்தனை நடந்தும்
விளகவும் இல்லை
விளக விடுவதும் இல்லை
என்னை உன் நினைவுகள்
உன் அணைப்பிலிருந்து!

என்றென்றும்
உன் நினைவுகளுடன்
சுவாசமாய்
உனைத்தேடும்
உன்னவள்!

Comments

Popular posts from this blog

இறுதிச்சடங்கு

உறவுகள்!

ஹைக்கூ கவிதைகள்