18. ரணப்பட்ட மன ஓலம்

என் மனதை சல்லடையாய்
சலிக்கும் உன்னை சந்திக்க துடித்த
நாட்களின் தொகையை
சிந்திக்கும் போதே
நஞ்சுக்குள்
நெருஞ்சி முட்கள்
மறு ஏவுகணை தாக்கமாய்
மதில் சுவரிடுகின்றன!
உன் கரங்களில்
கருணை மலர்களை
எதிர்ப்பார்த்த எனக்கு
கைவிட்டுப் போண
கசங்கிய கைக்குட்டை
தான் பரிசுப்பொருள்

என் கைகளின் சோகத்தை
உணர்ந்து பேனையின்
உணர்வுகள் வடித்த
இரத்த கண்ணீர் கறைகள்
காகிதத்தில் கோலம்!
ஆரிய காயங்கள்
மீள் சுழற்சி செய்கின்றன!
"நீ எனக்கு சொந்தமில்லை"
என்றோ மனதில் விழுந்த
நினைவுகளை மீட்டி பார்க்கின்றேன்
என்னுள்ளான,
சுமைகளின் கணத்தை முட்டி
எழ நினைக்கும்
என் உணர்வுகளை
மீண்டும் நானே குட்டி
குனிய வைக்கின்றேன்
சிறுக சிறுக பொக்கிஷமாய்
சேர்த்த கனவு வாழ்க்கை
கனவாகியே போனதனால்!

Comments

Popular posts from this blog

ஹைக்கூ கவிதைகள்

விழுவியம் காப்போம்

29. தவிப்போடு ஒரு மனசு