33. அப்பா!

அன்பின் உருவமே
அப்பா
கனவில் கூட
நினைக்கவில்லை
காளனோடு செல்வீரென - உயிரை
பிழிந்து எடுக்கிறது
வலி - உறவாய்
உயிராய் ஒன்றித்து
போனது நீ தானே?

நீ எனை விட்டு
சென்ற நாட்களின்
சேர்க்கை தசாப்த
காலத்தை எட்டிக் கொண்டிருக்கின்றது
ஆம்! நீ எனை
வீசிச் சென்ற
9 வருடங்களும்
வெருமையாயல்லோ
கழிந்துவிட்டது
எனக்கு!

ஊரோடு ஒன்றாய்
வாழவே விரும்புகின்றேன்
உனை போல
யாரும் இல்லையே
யான் என் செய்வேன்?
உன்னோடு
களித்த பசுமையான
நாட்களை சிந்திக்கும் போது கூட
முடிவதாயில்லை
துக்கம் தொண்டை
குழியை அடைக்கின்றது!

என் உள்ளத்து
அன்பினை முழுவதுமாய்
உன் மீதே செலுத்தியதால்
அன்பு செய்ய முடியவில்லை
உனை போல
யார் மீதும்
நடைப்பிணமாய்
நானாகி போனேனே!

முடிந்தவரை முயற்சித்து
தோற்றுவிட்டேன்
உன் நினைவுகளை
மீட்டாமல் விட! - நான்
முழுமைப் பெற்ற மனிதனாய்
உனை போற்றியதனாலா
முடித்துக் கொண்டாய்
உன் கதையை
நான் முழுமை பெறும் முன்னமே?

உனை போலவே பிறரையும்
நேசித்தாய்;
உண்மையை உணர்த்தி
நின்றாய்;
நான் நினத்ததெல்லாம்
கிடைக்கச் செய்தாய்!
நீ மட்டும் ஏன்
விட்டு சென்றாய்?
எனை தவிக்க
விட்டுச் சென்றாய்?

நீ இறந்த பின்னும்
இறக்காமல் என்னுள் நீ
என் உணர்வுகளுக்குள்
உறைந்தவராய்
கருத்துக்களுக்குள்
கரைந்தவராய்!

நீ அன்போடு எனை
அழைக்கும் "பபா".....
அவ்வப்போது விழித்துக்
கொள்கின்றேன் - உன்
அலைப்பின் ஓசைக் கேட்டு
அப்போது தான்
உன் இல்லாமையையும்
சேர்த்தே உணர்ந்து
கொள்கின்றேன்!

உன் அன்பில் திளைத்துவிடல்,
அரவணைப்பில் வாழ்ந்துவிட,
அணைப்பில் உறங்கிவிட,
கொடுத்து வைத்தவளாய்
இல்லையே நான்?
விட்டு விட்டு துடிக்குது
மனசு - உன் பிரிவை
என்னும் போது மட்டும்
இடைவிடாமல் துடிக்கிறது
உனை பார்த்துவிட வேண்டும்
என்ற ஆசையோடு!

நான் என் தவறு செய்தேன்
எனை ஏன் உயிரோடு
சாகடிக்கின்றாய்?
தந்தையே தயவு செய்து
வந்துவிடுங்கள்
உங்கள் பிள்ளை இவள்
உள்ளம்
கொதிக்கிறது
உனை காணாமல்!

உள்ளத்து உணர்வுகளை - என்
உதிரத்தை மையாக்கி
காற்றலையில்
கிறுக்குகின்றேன்
நீ காற்றோடு கலந்ததனால்;
என் உயிர் வலி தாங்காமல்
துடிப்பதை
உணர்வாய் என நம்பி
தந்தையே plz
வந்துவிடுங்கள்
என்னோடு!!!!!!!!!

Comments

Popular posts from this blog

இறுதிச்சடங்கு

உறவுகள்!

ஹைக்கூ கவிதைகள்