41. கூறி விடு

என்னவனே!
இதுவரை கேட்டதில்லை
நீ என் பெயர் கூறி;
இருந்தும் உன் பெயரை
நொடி நீங்காமல்
கூறுகின்றேன்
எனக்குள்ளே - ஏன்
உன்னிடம் கூட!
என் ஏக்கங்கள்
புரியவில்லையா?
இல்லை.....,
என்னை உனக்காய்
அலைய விடுகின்றாயா?
எப்படியோ;
எனக்குள் நீ வந்தாயிற்று
உனக்குள் நான்?
இது உறுதியாயின்
கூறி விடு - ஒரே ஒரு தடவை
மட்டுமாவது
என் பெயரை!

Comments

Popular posts from this blog

இறுதிச்சடங்கு

உறவுகள்!

ஹைக்கூ கவிதைகள்