44. நட்பே

எட்ட எட்ட நின்று
எனைத் தொட்டு விட்டுப்
போன நட்பே - உனை
எட்டி விடத் துடித்தேன்
எட்ட நின்று....!

கிட்டக் கிட்ட வந்து
எனைத் தட்டி விட்டுப்
போன நட்பே - உனைத்
தட்டி விடத் தவித்தேன்
தள்ளி நின்று....!

தட்டத் தட்ட முட்டி
எனைத் தள்ளி விட்டுப்
போன நட்பே - உனைக்
கட்டிபுட தவித்தேன்
கிட்ட நின்று....!

முட்ட முட்ட கிட்ட
எனை முட்டி விட்டுப்
போன நட்பே - உனைப்
பற்றிக் கொள்ளப் பார்த்தேன்
பக்கம் நின்று....!

வெட்ட வெட்டப் பக்கம்
எனைப் பார்த்து விட்டுப்
போன நட்பே - உனை
வென்றுக் கொள்ள அணைத்தேன்
வெட்கி நின்று....!

இப்படி எத்தனையோ நினைத்தேன்
எனக்குள்ளே - எனை ஏசி விட்டுப்
போறாய் உனக்குள்ளே;
அத்தனையும் இன்று
ஆறாமல் இருக்குது
எந்தன் அகத்திலே!

Comments

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

91.தமிழர் ஆடற்கலை வடிவங்கள்

29. தவிப்போடு ஒரு மனசு