36. வேண்டுகோள்


உன் காத்திருப்பு தேவையற்றது
மறுத்துப் போண இதயமானால்
நீ முயற்சி செய்யலாம்
சில வேளை உயிர்ப்படையும்
என்னதோ;
மரணித்துப்போண இதயம்
என்பதை புரிந்துகொள்
ஒவ்வொரு நொடிப்பொழுதும்
மகத்தானவை
அர்த்தமனவற்றுக்காய்
அதனை பயன்படுத்து
அனாவசியமாய் எனக்காய்
உன் நாட்களை விரயமாக்காதே
வீணான முயற்சியது
கானலாய் நான்
நீயும் கானலாக
அனுமதிக்க மறுக்கிறது மனசு
வேண்டாம் நண்பனே
நீ வாழ வேண்டியவன்
வாடிட முயற்டிக்காதே
வாழ முயற்சி!

Comments

Popular posts from this blog

இறுதிச்சடங்கு

உறவுகள்!

ஹைக்கூ கவிதைகள்