26. நண்பியே இனிமையான இத்தினத்தில் அகம் திறக்கின்றேன் உனக்காய்

நங்கையே நட்பின் நண்பியே;
உன் மடல் கண்டு
அகம் குளிர்ந்தேன்
கோடி நமஸ்காரங்கள்
உன் அன்பிற்கு!

உன் மனக்குமுறல்களின்
வெளிப்பாடுகள்
விடை காணா
வினா கொத்துக்களாய்
எனக்குள்!

உன் வலி தாங்கி
இதயத்தின்
சுமை தாங்கி நான்
கொட்டிவிடு எனக்குள் - உன்னில்
களி பிறக்கும்!

சோதனையும் வேதனையும்
தெரிந்திடாவிட்டால்
வாழ்வின் அர்த்தம் (உயர்வு)
உணரப்படாமல்
உதிர்த்தப்பட்ட
சருகாகிடுமோ?

நிலைமாறும் உலகம் இது
நீ மட்டும் தளர்ந்திடாதே
எள்ளி நகையாடி
ஏளனம் செய்யும்
இவ்வுலகம் - இதன்
நாக்கில் நரம்பின்மையோ?

ஊமை நரகமிது
உதறி தள்ள துடிக்கிறது
உன்னை மட்டும்
என்ற போதும் - உன்
தோல்விகளில் கை
கொடுக்க இறுதிவரை
உன் பெற்றோர் மட்டுமே!

மனதளவில் நொந்துவிட்டாய்
அதற்காக உன் வாழ்வை
மபுணித்து கொள்ள
உன் வயதோ
அனுபவமோ
போதியதாயில்லை!

உனை போல பல்லாயிரம்
அடிகளும் இடிகளும்
என் இதயத்தில் கூட
வலி தாங்கி பழகியதால்
வழு கொண்டு துடிக்கிறது
என் இதயம் இன்று!
உன்னதோ பிஞ்சு இதயம்
தளம்ப விடாதே அதனை
தளர்ந்து விடுவாய்!

நொந்து விடாதே செல்லம்
நொறுங்கிவிடும் மனசு
உன் துயரங்களில்
தோல் கொடுக்க
உன்னுயிர் தோழிகள்
இங்கே....!

அகம் திறந்து உரைக்கிறேன்
ஊமை காயங்கள் உனக்குள்
உளறி கொட்டி விடு
எனக்குள் - ஏற்றுக்கொள்ள
என்றும் நான் உனக்காய்!

அன்னையின் அன்பாய்
தந்தையின் ஆறுதலாய்
தமயனின் அரவணைப்பாய்
தமக்கையின் தழுவலாய்
நண்பியின் உறவாய்
மழலையின் சிரிப்பாய்
உலகில் இன்னும் எத்தனை
உறவுகளோ?
அத்தனையுமாய், அனைத்துமாய்
என்றும் நான் உனக்காய்
ஏக்கத்தோடு கேட்கின்றேன்
ஏற்றுக்கொள் என்னை
எனக்கும் யாரும் இல்லை!

எனக்காய் செய்து விடு
ஒன்றை மட்டும்
எப்போதும் விடாமுயற்சியோடும்
தன்னம்பிக்கையோடும்
தைரியத்தோடும் செயற்படு
என்றும் வெற்றி உனக்காய்
உனக்காய் மட்டும்!

என் மனதின்
மௌன வலிகள்
புரிகின்றதா உனக்கு?
கல்வி மட்டும் தான்
துணை எனக்காய்;
இன்று;
யாரை நம்பி நான்?
கல்வியில்லையேன்
என் நிலையும்
கானல் நீர்தான்

அன்பானவளே!
அறிவுப்பூர்வமாய்
செயற்படு
கற்றுவிடு கவலையோடல்ல
களிப்போடு கஸ்டப்பட்டு
களியுகம் வந்து வீழ்ந்திடும்
உன் காலடியில்!

சொல்ல நினைத்ததனை
சொல்லிவிட்டேன்
என் மொழியில்
வீரு கொண்டெழு
நீ வீழும் போது
உனை தாங்க
உன் உறவு
நான் இங்கே!

உனக்காய்
உன் நட்பின் நண்பி
ஜோ. கீர்த்தி

Comments

//எனக்காய் செய்து விடு
ஒன்றை மட்டும்
எப்போதும் விடாமுயற்சியோடும்
தன்னம்பிக்கையோடும்
தைரியத்தோடும் செயற்படு
என்றும் வெற்றி உனக்காய்
உனக்காய் மட்டும்!

நல்ல வரிகள்..

Popular posts from this blog

ஹைக்கூ கவிதைகள்

விழுவியம் காப்போம்

29. தவிப்போடு ஒரு மனசு