35. வினாத் தொடுப்பு

தீப்பிளம்பு தாண்டிய நீரலை
தினம் தேடும் தீண்டலை
ரசிக்க துடிக்கும் மனதினை
சுமந்து நடக்கும் பூ இவள்!
(தீப்பிளம்பு)

எந்த தாயின் சுவாசம் தொட்டு
சேயவனும் துடித்ததுண்டு?
எந்த காற்றின் தழுவல் தொட்டு
உயிரதுவும் உறைந்ததுண்டு?
(தீப்பிளம்பு)

பேசி விட இருந்ததுவோ ஒரு தருணம்
பேசாமல் கழிந்ததுவோ பல தருணம்
இதயமே..... இதயமே.....
உன் விழி தீண்டலால்
வினாக்கணைகளை தொடுத்துவிட்டு
விடைகளை தர மவுத்தலில் நியாயமுண்டோ?
(தீப்பிளம்பு)

நிஜத்திலும் நிழலிலும்
நினைவிலும் கனவிலும்
நீட்சி செய்து ஆட்சி செய்துவிட்டு
அருகருகே இருந்த போதும் - எனை
அண்டாமல் செல்வதேனோ?
(தீப்பிளம்பு)

Comments

Popular posts from this blog

ஹைக்கூ கவிதைகள்

இறுதிச்சடங்கு

சிந்து பைரவி