47. மெய்க்காதல் தீண்டா மெழுகுகள்!

வாழ்க்கை பரபரப்பில்

அவசரமாய் ஓடும்

கால நேரத்தில்

செவ்வானம் மூடிய

அஸ்தமனத்தின்

பின் இருளின்

தனிமையிலும்

நீயும் நானும்;

உனக்குள் நானாய்...

எனக்குள் நீயாய்....

நமக்குள் நாமாய்....

பேசி முடித்த

வார்த்தைகளின்

உணர்வு கசிவுகள்

சுவாசமாய்

சுரம் மீட்டுகிறது!

புரிந்துக் கொள்ளப்படாத

நாட்களின் கணத்தை

முட்டி மோதி

வந்தமர்கின்றது – எனக்குப்

பிடித்த உன் குரலினோசை!நான் மட்டுமே

என்று குருக்கப்பட்ட

என் வாழ்க்கைத்

தோட்டத்தில்

புது பொழிவுடன்

என் மலராய்

எனக்குள் பூத்த

முதல் காதல் அரும்பு நீ!

என் தோள் வாங்கித்

தூங்கும் உன்

மூடிய விழிகளில்

விழிப்பதற்காய்

தவமிருக்கின்றேன்

என் விழிப்பே

நீ என்பதால்!

உன்னோடில்லை

உன் நிழலைத் தொடத்

தொடங்கிய தொடக்கமே

உன் தொலைவான

மனதிம் நெருக்கம்

பெற்றேன்!தோல்வியாலல்ல தொடர்ந்து

நெருக்கமான உறவுகளால்

துப்பப்பட்ட உணர்ச்சிகளற்ற

வார்த்தைகளால் தொடங்குகிறது

உனக்காய் என் கவிதை!உன்னாலல்ல

உன் நிழலால் கூட

துரத்த முடியா

என் காதலை

ஒரு நொடியில்

சபித்த இவர்கள்

உண்மையில்

உணர்ச்சிகளற்றவர்கள் தான்!உனக்குள் நான்....

எனக்குள் நீ....

நமக்குள் நாமாய்....

தொலைந்த நொடிகளின்

நீளத்தின் ஆழத்தை

ஒற்றை நொடியில்

உதாசீன வார்த்தைகள்

கொண்டு வீசும் இவர்கள்

உண்மையில்

உணர்ச்சிகளற்றவர்கள் தான்!வலிக்கிறது.....

உன் நிழலின் துளி கூட

எனை விளகக் கூடாதென

உனை அணுவணுவாய்

நேசிக்கும் எனை நோக்கி

இவர்கள் வீசும் வார்த்தைகளால்

வலிக்கிறது என் உள்ளம் மட்டுமல்ல

உணர்வுகளும் தான்!சிறுபராய விளையாட்டாய்

தொடங்கிய அந்த

முதல் சந்திப்பே - உன்

கால் தடத்தை

பசுமரத்தாணியாய்

என் அகத்தினிலே

ஆழமாய் பதிக்க

சுதந்திரமாய் ஓடித்திரிந்த

என் உணர்வுகள்

உனை சுற்றியே

வட்டமிடுகின்றன!உன்னில் நான்....

உனக்குள் நான்....

உனக்காய் நான்....

என்னில்

என் சிரிப்பில்

என் அழுகையில்

என் அணைப்பில்

என் தவிப்பில்

என் தழுவலில்

என் ஏமாற்றத்தில்

என் தடுமாற்றத்தில்

என் தத்தளிப்பில்

என் ஏக்கத்தில்

என அனைத்திலும் நீ

இன்று நீயே என் உலகமாய்!உன்னோடு நான்

கொண்ட காதலின் ஆழம் தெரியாமல்

ஒற்றை வார்த்தையில்

என் வாழ்வினை முடிக்கிறேன்

என்கிறார்கள்

உனைத்தொலைத்த

மறு நொடி

என் உயிர்

பிரிந்துவிடும்

என்பதறியாது!

உனை இழக்கும் சக்தி

எனக்குள் ஏதடா?

உனக்காய் நான்

தொலைக்கும்

ஒவ்வொரு நொடிப்பொழுதின்

உன்னதம் உணர்வார்களா?

உன் நினைவு சுவடுகளால்

உறைந்துப் போண என்

மனதை உதாசீனமாய்

பார்க்கின்றார்கள்

மெய்க்காதல் தீண்டா

மெழுகுகள்!

Comments

Popular posts from this blog

இறுதிச்சடங்கு

உறவுகள்!

ஹைக்கூ கவிதைகள்