32. உனக்காக

என்னவனே,
எனக்குள்
அணுவாய் தொலைந்த
என்னுயிரே

உன்னால்
உனக்காக
எத்தனை தவிப்புக்கள்

இதயம் இடம்மாற
தவிக்கவில்லை
உனக்குள்
இடம்மாறியதால்
தவிக்கிறது
இருந்தும்
தடம்மாற போவதில்லை

உனக்குள் உள்ள
மென்மை கண்டு
என் பெண்மை
நாணிப்போகின்றது

உன் மூச்சை
கடன் வாங்க
பிடிக்காமல்
திருட முனைகின்றது

என் நாட்கள்
மட்டுமல்ல
மணித்துளியான
விநாடிகளும்
உன் நாமம்
உச்சரித்த வண்ணமே

ஏனடா…….?
எதற்காக
இத்தனை
அவஸ்தைகள்
உன்னால் மட்டும்

செத்து பிழைப்பது
புரியவில்லையா……?

உன் மடிசாயும்
அந்நொடி எப்போ
ஏக்கத்தோடு
இவள் சின்ன
இதயம்
உனக்காக
உயிர்தாங்கி…

அன்பனே உனக்காக
உனக்கே உனக்காக
மட்டும்!

Comments

Popular posts from this blog

ஹைக்கூ கவிதைகள்

விழுவியம் காப்போம்

29. தவிப்போடு ஒரு மனசு