27. நீ வேண்டும்

பேச மறுக்கும்
உன் நினைவுகளோடு
பேச துடிக்கும்
என் மனதுடிப்பை
கட்டி வைக்கின்றேன்!

கனவுகளிலும்
கொஞ்சம் தள்ளியே நிற்கின்றேன்
கனவு காணும்
என் வாழ்க்கை
கானலாய் மட்டுமே
போய்விட கூடாதென்பதற்காய்!

நான் உன்னோடு வாழவே
தவிக்கின்றேன்
என் உயிரின் உணர்வே
நீ என்பதால்
உன் அன்பின் ஆழத்தால்
அடங்கி போகின்றேன்
உனக்குள்ளேயே!

உன் அரவணைப்பால்
ஆடிப்போகின்றேன்
இருந்தாலும்
இறுதிவரை இதே
உறவாய் உனையே கேட்கின்றேன்

என் உறவாய்.........
என் உணர்வாய்.......
என் உயிராய்.........

இதே உறவாய்
உனையே கேட்கின்றேன்
என் முடிவு வரை!

உனக்காகவே என் நாட்கள்
உயிர்ப்போடு………………!
உனக்காகவே நான்
உயிரோடு………………!

Comments

Popular posts from this blog

இறுதிச்சடங்கு

உறவுகள்!

ஹைக்கூ கவிதைகள்