46. ????????????????

விழி நோக்கிக் கதை பேச
விதியதுவும் எனக்குண்டோ?
விரல் நீட்டி உனைத் தீண்ட
விதியதுவும் எனக்குண்டோ?

பருவங்கள் மாறி மாறி
பல்லாயிர தருணங்கள்
என்ற போதும் - என்னவனே
உனைத் தாண்டி நீண்டதில்லை
என் நினைவுகள்!

மொழி பேசத் தயங்கிய
முதல் தருணம் உன்னோடு;
முழு மனதாய் சுமந்து கொண்டேன்
கருவறைக்குள் கடவுள் போல!

இறுகப் பூட்டிய இதயக்கதவு
திறக்கவில்லை - என்னவனே
உன் அணுவணுவான
சுவாசமும் படித்தாண்டிடக்
கூடாதென!

உன் மீது காதல் உணர்வு
ஒருபோதும் குறைந்ததில்லை
குறையும் நிலை வந்திடிலோ
குழியதற்குள் என்சுவாசம்!

என்னவனே உன் உறவு
எல்லையில்லா ஆனந்தம் - உன்
உணர்வை பிரிந்திடுவேன் - உலகில்
என் கடை நொடியில்
அத்தருணம் எப்போதோ
யானறியேன் என்னவனே
அதுவரையில் உனை சுமப்பேன்
என் உயிரின் உயிராக!

உனைப் பிரியும் தருணமது
என் வாழ்வின் கடை நொடியே;
எனக்கான தவமதுவோ
என்னவனே உனை நோக்க!

Comments

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

ஹைக்கூ கவிதைகள்

29. தவிப்போடு ஒரு மனசு