25. நாளைய விடியல்

ஒவ்வொரு அஸ்தமனமும்
விடியலை நோக்கி புறப்பட
என்னதோ
உனை தளுவ வியக்கின்றது!
என் எழுதுகோள்
ஏறி நின்றல்லோ - உன்
நாமத்தில் ஸ்வரம் சேர்க்கின்றது!
உன்னால் நேர்ந்த
தோல்வியிலும் ஒரு சோகம்
தோற்றம் பெருகின்றது!
ஒரு வேளை நமக்குள்
இந்த பிரிவு நேராதிருப்பின்
நம் உறவின் உயர்வும்
மண்ணாயிருக்குமோ?
இன்று,
என்னுள் வடுக்கள் இருந்தப்போதும்
வலிகள்(வருத்தம்) இல்லை
மறைந்தது நம் உறவாயிருக்கலாம்
மாறாதது நம் நினைவின் உணர்வு!
வாழ்க்கை வாடிவிடவில்லை
சுவையமுது பொழிகிறது
விரும்பிய நீ விளகியதனாலோ!
உன்னால் வாழ துடிக்கிறது மனசு
உன்னோடில்லாவிடினும்
நீ சுவாசிக்கும் மூச்சின் முன்னாலாவது!

நீ தந்த ஏமாற்றம் தான்
என்னுள் முதற்படி
இன்று என்னோடு
நீ இல்லாத போதும்
என் நாளைய விடியலின்
உதயத்திலும் - உன்
நினைவுகளோடு பேசிக்கொள்ள
உயிர்த்தெழுவேன்
உன் நேற்றய காதலியாய்!

Comments

Popular posts from this blog

ஹைக்கூ கவிதைகள்

இறுதிச்சடங்கு

உறவுகள்!