28. உனக்காய் உனக்காய் மட்டுமே!

அன்பாக அரவணைக்கும்
உன் தோள்களிலே
தலை சாய்த்து;
உன் மார்பு சூட்டில்
குளிர் காய்ந்து;
உன் மடி மீது
முகம் புதைத்து;

வாழப்போகும்
அந்நாட்கள் தரும்
இன்பத்தை……;
சொர்க்கத்தை……;

இன்னொரு ஜென்மம் எடுப்பினும்
தரமுடியுமா
இவர்களால் எனக்கு?

உன்னாலே உயிர் பெற்றேன்!
உன்னாலே உணர்வுகளை
சுவாசிக்கின்றேன்!

உனை பிரிவதனிலும்
பிரிவது என் உயிராயிருக்க
ஆசைப்படுகின்றேன்!
அன்பனே.....; - என்
அன்பானவனே..........;

அடைக்கலம் கேட்கின்றேன்
உனக்குள் மட்டும்!
சிறைக்கைதியாயல்ல;
ஆயுள் கைதியாய்!

என் ஒவ்வொரு நாளையும்
உனக்காய் உனக்காய்
மட்டுமே விடிய ஆசைப்படுகின்றேன்
நீ எனக்குள் வாழ்வதால்!

உனை சிந்திக்க மறந்தால்
என் இதயம்
சின்னாபின்னம்தான்!

மறு ஜென்மம் நான் பெற்று
உயிர்ப்பதாயினும்
உனக்காய் உயிர்க்கவே
ஆசைப்படுகின்றேன்! - மீண்டும்
உயிர்விட்டு போவதாயினும்
உனக்காய் உயிர்விட்டு போகவே
ஆசைப்படுகின்றேன்!

என்னவனே எனக்குள்ளேயே
தொலைந்துவிடு
என் இறுதிவரை!

உனை நீங்கி துளி தூரம்
நகராது என் நாட்கள்
உயிருக்குள்
உயிர்தாங்கி நீ
இருப்பதால்!

Comments

Popular posts from this blog

இறுதிச்சடங்கு

உறவுகள்!

ஹைக்கூ கவிதைகள்