48. வாழ்க்கை என்றால் என்ன?

தொலைபேசி சிணுங்கியது


மறுமுனையில் நண்பன்

“வாழ்க்கை என்றால் என்ன?

எதில் ஆரம்பித்து,

எங்கே முடிகிறது?

சௌந்தர்யமானதா?

வறுமையானதா?

இன்பனானதா?

துன்பமானதா?

அதில் என்னென்ன இருக்கும்?




மீண்டும் அழைக்கிறேன்

என்ற ஒற்றை வார்த்தையோடு

தொடர்பைத் துண்டித்தேன்



நண்பன் எனக்குள்

எழுப்பிய பல்வேறான வினாக்களைத்

தொகுப்புக்களாக ஏந்தி

பயணிக்கத் தொடங்கினேன்

எனக்குள்ளான எல்லா

வினாக்களுக்கும் விடைத்தேடியே

திரும்ப வேண்டுமென்ற

ஒரு திடமான எண்ணத்தோடு

தெருவோரமாக

நடக்கத் தொடங்கினேன்!



அங்கே....!



குழந்தைகள் தன்னை மறந்து

குதூகலமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள்

அவர்களின் சிரித்த முகம்

வாழ்க்கை இன்பம்!



சிறிது தூரம் நடக்கின்றேன்.......!



தன் பலம் அனைத்தையும்

ஒன்றாய் திரட்டி

ஆசை மனைவியைத்

தாக்கிக் கொண்டிருக்கின்றான்

ஒரு வீரன்

அவளின் அழுகுரல், கண்ணீர்

வாழ்க்கை துன்பம்!






மீண்டும் நடக்கின்றேன்....!






ஒரு வீட்டில்


மகளின் பிறந்த நாள் விழாவாம்


தெருமுனைவரை அலங்கரிக்கப்பட்டு


ஆட்டமும் பாட்டமும்


வருவோர் போவோருக்கெல்லாம்


பரிசில்கள்


வாழ்க்கை சௌந்தர்யம்!






தொடர்ந்து நடக்கின்றேன்....!






ஒரு சிறுமியின் அழுகுரல்


அம்மா பசிக்குது


தாயாரின் குரல்


அப்பா வந்துடுவார் பொறு மகளே


“நேற்றும் நீ இதைத்தான்

சொன்னாய்”
தொடர்கிறாள் சிறுமி



வாழ்க்கை வறுமை!






விடைத்தேடி மீண்டும்......!






வைத்தியசாலை


உலகையே அதிர வைக்கும்


ஒரு தாயின் அழுகுரல்


இடைவிடாது


சிறிது நேரத்தில்


தாயின் அழுகுரல் அடங்கி


மகவின் குரல் பிறக்கிறது


வாழ்க்கை ஆரம்பம்!






விடை கண்டே தீர வேண்டும்

கால் கடுத்தும் தொடர்ந்து நடக்கின்றேன்....!







பாதை தோறும் வெள்ளை நிறக் கொடிகள்


பலரின் அழுகுரல்


அதில் சத்தமாக


ஒரு தாயின் அழுகுரல்


“என்னை விட்டு போயிட்டாயே மகனே”


வாழ்க்கை முடிவு!






களைப்படைந்த நான்


ஒரு மரனிழலில் ஒதுங்குகிறேன்






தொலைப்பேசி சிணுங்கியது


மீண்டும் அதே நண்பன்


விடைக் கிடைத்ததா?






சற்று நேர மௌனம்






எனக்குள் நானே கேட்டுக் கொண்டேன்


விடைக்கிடைத்ததா?






மீண்டும் நண்பன்


என்ன பதிலையே காணோம்






அதைத் தான் இன்னும்


தேடிக்கொண்டிருக்கின்றேன்


நான் கண்டே தீருவேன்


என்றேன்






அவனிடமிருந்து ஒரு


கேளிச்சிரிப்பு


அழைப்பைத் துண்டித்தான்






அன்றிலிருந்து இன்றுவரை


நானும் தேடிக்கொண்டிருக்கின்றேன்


விடையைத் தான்........?






ஆமாம் வாழ்க்கை என்றால் என்ன?

வாழ்க்கை வாழ்ந்து தான் பார்க்கனும்






Comments

வாழ்க்கை பற்றிய கவிதை அருமை.... தேடலின் ஆரம்பம் அமர்க்களம்.

ஐம்பதாவது பதிவுக்கு முற்கூட்டிய வாழ்த்துக்கள்.....

கொஞ்சம் தாமதமா வந்து முதல்ல வாழ்த்து சொன்ன பெருமையோட திரும்புகிறேன்....

வாழ்த்துக்கள்......

Popular posts from this blog

ஹைக்கூ கவிதைகள்

விழுவியம் காப்போம்

29. தவிப்போடு ஒரு மனசு