37. இன்றே தொடங்கிவிடு


ஒரு கணம் - என்
மரணத்தை வென்ற
அந்த ஒரு கணம்
உன் கண்கள் தீண்டியதே தான்
ஏனோ எனை கடந்த
அந்த ஒரு கணம்
ஓராயிரம் பட்டாம் பூச்சிகளையல்லோ
எனை சுற்றி சிறகடிக்க வைக்கிறது
உன் மெல்லிய இதயத்தின்
ஓசைகள் - என்
மறுத்துப் போண இதயத்தைக் கூட
தட்டி எழுப்புகின்றதே
ஏனோ இந்த மாற்றம்?
எல்லாம் கணக்கிட்டுப் பார்க்கின்றேன்
இதுவும் பருவகால மாற்றம் தான்
நாளை மீண்டும் என் இதயம்
இறந்துவிடும் என்பது புரிகின்றது

தோழனே;
தெளிவாய் உரைக்கிறேன்
எனக்காய் நீ உன் நாட்களை
விரயமாக்குவதை விடுத்து
உன்னவளை தேடி - உன்
பயணத்தை தொடங்கிடு
உனக்கானவள்
உலகில் உயிர்ப்புடன்
உன் நன் மனதிற்கு
வெற்றி உன்
இதயகதவை தட்டும்!
உன் வாழ்வு ஒளிபெறும்!


Comments

Popular posts from this blog

இறுதிச்சடங்கு

உறவுகள்!

ஹைக்கூ கவிதைகள்