20. விளைவு

தொலைவாகி போண
என் தேடலை
தொடத்துடித்த
தொடக்கமே.......
தொலைவாகி போனது
என் தேடல் மட்டுமல்ல
நானும் தான்...!

தொட்டுப்பார்க்க விரும்பி
நெருப்பை உள்ளே
சுட்டுப்பார்த்தவள்
நான் கூடத்தான்!

கானலாகிய
காலங்களை
கடந்து சென்றது போதாதென
நின்று பார்த்ததால்
இன்று;
நானே கானலாய்!

எல்லை மீறிய
என் துடிப்பை
எட்டிப்பிடிப்பதாய் கூறி
எரியப்பட்டவளும்
நான் தான்!

இத்தனைக்கும் காரணமாய்
என்னுள் நின்ற
உன்னை விட்டு
இன்று;
தொலைவானவளும்,
சுடப்பட்டவளும்
கானலானவளும்,
நான் தான்
நானே தான்...!

Comments

Popular posts from this blog

ஹைக்கூ கவிதைகள்

விழுவியம் காப்போம்

29. தவிப்போடு ஒரு மனசு