42. தவிப்பு

நீ ஒரே ஒரு
பார்வையை தான்
வீசுகிறாய்;
நானல்லவா
இங்கே பாகாய்
போகிறேன்!

நீ ஒரே ஒரு
புன்னகையை தான்
உதிர்க்கிறாய்;
நானல்லவா
இங்கே சிதைந்து
போகிறேன்!

ஆனால்.......;
நீ ஒரே ஒரு
வார்த்தை
கூற வேண்டி தான்
எதிர்ப்பார்க்கின்றேன்;
ஏனோ நானல்லவா
இங்கே ஏமாந்து
போகிறேன்!

Comments

Popular posts from this blog

ஹைக்கூ கவிதைகள்

விழுவியம் காப்போம்

29. தவிப்போடு ஒரு மனசு