40. உன்னத காதல்

உன்னருகில் நான்
என்னருகில் நீ என
நம்மருகில் நாம்
இல்லாவிட்டாலும்
நம்மனவறைகளில்
நெருக்கமான இடங்களை
அடைந்துவிட்டோம் - இன்னும்
உனக்குள் ஏனிந்த அச்சம்???
பைத்தியக்காரி - இவர்களால்
பிரிக்க முடிவது
நம் உயிரையே! - நம்
உன்னத காதலை அல்ல
மரணம் தாண்டியும்
உயிர்பெற்று துடிப்பது காதல்....!

Comments

Popular posts from this blog

ஹைக்கூ கவிதைகள்

விழுவியம் காப்போம்

29. தவிப்போடு ஒரு மனசு