38. புரிந்துக் கொள்
வாழ்வின் வசந்த காலங்கள்
வழுக்கட்டாயமாய்
வரவேற்கின்றன தான்
எது எப்படியோ
இறந்த காலங்கள்
இன்னும் இறக்க மறுக்கின்றன்
என்னுள்ளே எனக்குள்ளே!
வாடிக்கையாகிவிட்ட
வாலிபர் ஏமாற்றத்திற்குள்
நானும் தஞ்சம் தான்
இன்னொரு முறை - அதே
வலியை சந்திக்க
உடலில் வலு உள்ளதோ
இல்லையோ
மனதில் துளியும் இல்லை
அந்த வலியை இன்னொருமுறை
சந்தித்தால் நொறுங்கியே விடுவேன்
மரணப்படுக்கைக்கே என்னை
இழுத்து சென்ற அந்த வலி
என் மபுணிப்பில் கூட
மரணிக்காது
இன்னிலை அறிந்தே
மாற்றங்கள் வேண்டாமென
மண்றாடுகின்றேன்
இதன் சித்தமே
இறந்தே கிடந்துவிடட்டும்
என் உள்ளமும் என
அவஸ்தைபடுகின்றேன்
உன் அம்பு அதை தகர்த்தி
துளிர்விட செய்திடுமோ
என்வ அச்சமும் இன்று
எனை சூழ பயணிக்கின்றது!
ஜடங்கள் நடுவில்
மனிதனாய் நான் கண்ட
ஒரு சிலரில் நீயும் அடக்கமே
உன் அன்புக்குள்
நானும் கட்டுண்டு தான்
அதனால் தான்
மனம் இன்னும்
மதுப்பளிக்கின்றது
உனக்கும் உன் உறவுக்கும்
இனி உலகில்
உயிரோடு நானிருக்கும்
ஒவ்வொரு மணிப்பொழுதும்
உன்னிய மறவாது!
நட்பே நாணயமானது
அன்பனே;
நட்பின் சிறைக்குள்
சந்தோசமாய்
நாமும் அடைப்படுவோம்
சிட்டாய் சுற்றிடுவோம்
தடைகளை தகர்த்து
சுதந்திரப் பறவைகளாய்
நான் இருவரும்!
Comments