43. எனக்குள்ளே எனக்குள்ளே ஏன் இந்த மாற்றங்கள்?

எனக்குள்ளே எனக்குள்ளே
இந்த மாற்றங்கள் ஏனடா?
உனக்குள்ளே உனக்குள்ளே
வாழ்கின்றேன் நானடா!


உந்தன் புரியாத பார்வைக்குள்
புதைகிறது உள்ளமே!
புதினங்கள் செய்து
புதிர் போட்டு கொல்லுது!
இரவான பகலுக்குள்
பார்க்கின்றேன் உன் முகம்!
நிஜமான நிழலுக்குள்
சேர்கின்றேன் உன்னகம்!


எனக்குள்ளே எனக்குள்ளே
இந்த மாற்றங்கள் ஏனடா?
உனக்குள்ளே உனக்குள்ளே
வாழ்கின்றேன் நானடா!


திவட்டாத நினைவுகள்
எனக்குள்ளே தழும்புதே!
நிமிடங்கள் தாண்டியும்
நீளுதே காலமே!
நினைத்திட நினைத்திட
இனிக்குதே வாழ்க்கையே!
நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள்
ஒரு புஸ்பமே வளருதே!



எனக்குள்ளே எனக்குள்ளே
இந்த மாற்றங்கள் ஏனடா?
உனக்குள்ளே உனக்குள்ளே
வாழ்கின்றேன் நானடா!



உனை தொட உனை தொட
துடிக்குதே நெஞ்சமே!
பழகிய காலங்கள்
பசுமையாய் தளிருதே!
பனிதுளி பனிதுளி
பட்டாம்பூச்சியாய் மிளிருதே!
எனக்கான உலகிலே
பறவைகள் இராட்சியம்!
பசுமைகள் வழங்கிடும்

குழந்தையின் குரும்புகள்!


எனக்குள்ளே எனக்குள்ளே
ஏன் இந்த மாற்றங்கள்?
இன்று;
புரிந்தது புரிந்தது
என்னவன் நீயென!
நீயும் புரிந்துகொள் புரிந்துகொள்
உன்னவள் நானென!


எனக்குள்ளே எனக்குள்ளே
இந்த மாற்றங்கள் ஏனடா?
உனக்குள்ளே உனக்குள்ளே
வாழ்கின்றேன் நானடா!





Comments

இரசித்தேன்.. சிரித்தேன்..நல்லாயிருக்கு..

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

ஹைக்கூ கவிதைகள்

29. தவிப்போடு ஒரு மனசு